போரை நிறுத்தும் வல்லமை ஒரு புகைப்படத்திற்கு உண்டு என்பதை உலக மக்கள் உணர்வதற்கு காரணமாக இருந்த புகைப்படத்தை நிக் யுட் (Nick Ut) என்பவர் எடுத்தார். இப்புகைப்படம் உலகப் புகழ்பெற்ற புகைப்படங்களில் ஒன்று. இந்த புகைப்படத்திற்கு புலிட்சர் விருது அவருக்கு வழங்கப்பட்டது. இவர் லாஸ் ஏஞ்சல்ஸில் பத்திரிகை ஒன்றின் புகைப்படகாரராகப் பணிபுரிந்தார். இவர் 1951ஆம் ஆண்டில் பிறந்தவர். வியட்நாம் போர் என அழைக்கப்படும் யுத்தத்தின் விளைவுகளையும், பாதிப்புகளையும் நேரில் கண்டு அதனை புகைப்படம் எடுக்க அங்கு சென்றார்.

ட்ராங் பாங்க் (Trang Bang) என்னும் இடத்தில் ஒரு சிறுமியின் உடை எரிந்த பின் அவள் ஆடையின்றி ஓடி வரும் காட்சியை அவர் புகைப்படம் எடுத்தார். அச்சிறுமியின் உடலின் பின்புறம் பலத்த தீக்காயங்கள் இருந்தது. பான் தை கிம் புக் (Phan Thi Kim Phuc) என்ற அச்சிறுமிக்கு அப்போது வயது 9. அவள் 1963ஆம் ஆண்டு ஏப்ரல் 2 அன்று பிறந்தார். போரினால் பாதிக்கப்பட்ட அச்சிறுமியின் கதறல் உலகம் முழுவதும் எதிரொலித்தது. இப்புகைப்படத்தை 1972ஆம் ஆண்டு ஜூன் 8 அன்று எடுத்தார். இது அமெரிக்க பத்திரிகைகளிலேயே வெளிவந்தது.

License

Icon for the Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License

சரித்திரம் காட்டும் புகைப்படங்கள் Copyright © 2015 by Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License. is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License, except where otherwise noted.

Share This Book