56 சூரிய சக்தி விமானம்
சூரிய சக்தியால் இயங்கும் முதல் விமானம் சோலார் இம்பல்ஸ் – 2 (Solar Impulse) என்பதாகும். இந்த விமானம் 12 ஆண்டுகள் உழைப்பால் உருவாக்கப்பட்டது. ஐக்கிய அரபிய நாடுகளில் ஒன்றான அபுதாபியில் உள்ள தனியார் நிறுவனங்களின் முயற்சியால் இந்த உலகின் முதல் சோலார் விமானம் தயாரிக்கப்பட்டது. இதில் இரண்டு பேர் மட்டுமே பயணம் செய்ய முடியும். இந்த விமானத்தை வடிவமைப்பதில் சுவிட்சர்லாந்து நாட்டைச் சேர்ந்த விமானிகள் ஆண்ட்ரே போர்ச்பெர்க் மற்றும் பெர்ட்ராண்ட் பிக்காட் ஆகிய இருவரும் முக்கிய பங்கு வகித்தனர். இது முழுக்க முழுக்க சூரிய சக்தியால் இயங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஒரு துளி எரிபொருள் கூடப் பயன்படுத்தாமல் விமானம் பறக்கக் கூடியது. இந்த விமானத்தின் இறக்கைகள் 72 மீட்டர் (236 அடி) நீளம் கொண்டது. இதில் 17,000 சூரிய தகடுகள் பொருத்தப்பட்டுள்ளன. இந்த விமானம் 2.3 டன் எடை கொண்டது. மணிக்கு 50 முதல் 100 கிலோ மீட்டர் வேகத்தில் பறக்கும் ஆற்றல் கொண்டது.
சூரிய சக்தியை சேமித்து இரவு நேரத்திலும் இயங்கும் வகையில் தொழில் நுட்பங்கள் செய்துள்ளனர். இந்த விமானம் உலகத்தை ஒரு முறை சுற்றி வருவதற்காக 2015ஆம் ஆண்டு மார்ச் 9 அன்று தனது பயணத்தை துவக்கி உள்ளது. இந்த விமானத்தை ஆண்ட்ரே போர்ச்பெர்க் மற்றும் பெர்ட்ராண்ட் ஆகிய இருவரும் மாறிமாறி இயக்குகிறார்கள். இரண்டு மாத பயணத்திற்குப் பிறகு மீண்டும் வெற்றிகரமாக அபுதாபி சென்றந்தது
Feedback/Errata